ஒருவரது ஆரோக்கியத்தில் தூக்கம் முக்கிய பங்கை வகிக்கிறது. ஒருவர் போதுமான அளவில் தூக்கத்தை மேற்கொள்ளாவிட்டால், உடலில் ஆற்றல் குறைவதோடு, மெட்டபாலிசமும் பாதிக்கப்பட்டு, கொழுப்புக்கள் கரையாமல், எந்நேரமும் வயிற்று உப்புசத்துடன் இருக்கச் செய்யும்.
ஆனால் தற்போதைய மன அழுத்தம் நிறைந்த வாழ்க்கை முறையால் பலர் தூக்கம் கிடைக்கப் பெறாமல் அவஸ்தைப்படுகின்றனர். நீங்களும் அத்தகையவர்களுள் ஒருவரானால், இக்கட்டுரை உங்களுக்கு உதவியாக இருக்கும். ஏனெனில் இந்த கட்டுரையில் இரவில் உடனடி தூக்கத்தைப் பெற உதவும் ஓர் அற்புத பானம் கொடுக்கப்பட்டுள்ளது.
பால்
பாலில் புரோட்டீன், அமினோ அமிலங்கள் போன்ற அத்தியாவசிய சத்துக்கள் உள்ளது. இது தூக்கத்தைப் பெற உதவும் செரடோனின் மற்றும் மெலடோனின் போன்ற ஹார்மோன்களின் உற்பத்தியைத் தூண்ட உதவுகிறது.
தேன்
தேன் இனிப்புச் சுவையைக் கொடுப்பதோடு, மூளையில் மெலடோனின் உற்பத்திக்கும் உதவுகிறது. இது தூக்கத்தைப் பெற உதவும் முக்கிய உணவுப் பொருட்களுள் ஒன்று.
வென்னிலா எசன்ஸ்
பல ஆய்வுகளில் வென்னிலாவில் இருந்து வெளிவரும் வாசனை மனதை அமைதிப்படுத்த உதவி, இரவில் நல்ல தூக்கத்தைப் பெற உதவுகிறது.
செய்முறை
முதலில் ஒரு பாத்திரத்தில் ஒரு கப் பாலை ஊற்றி அடுப்பில் வைத்து, நன்கு கொதிக்க விட்டு இறக்க வேண்டும்.
பின் ஒரு டம்ளரில் அந்த பாலை ஊற்றி, அத்துடன் 1 டேபிள் ஸ்பூன் தேன் மற்றும் சில துளிகள் வென்னிலா எசன்ஸ் சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்.
குடிக்கும் முறை:
இந்த பானத்தை இரவில் படுக்கும் முன் குடிக்க வேண்டும். இதனால் படுக்கையில் படுத்த 1 நிமிடத்தில் ஆழ்ந்த தூக்கத்தைப் பெறக்கூடும்.