Loading...
மேச்சேரி அருகே உள்ள சீலநாயக்கனூர் கிராமத்தை சேர்ந்த கூலி தொழிலாளி சத்தியராஜின் மனைவி சத்யா, கடந்த 12 ஆம் திகதி சேலம் அரசு மருத்துவமனையில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அப்போது சத்யா பிரசவ வலியால் கதறி அழுததால், பணியில் இருந்த செவிலியர்கள், சத்யாவை தகாத வார்த்தையால் திட்டியும், இரும்பு கம்பியால் அவரது தொடைப் பகுதியில் அடித்து காயப்படுத்தியதாகவும் கூறப்படுகிறது.
Loading...
இதுகுறித்து தகவல் அறிந்த தமிழ்நாடு பெண்கள் சங்கத்தினர், பாதிக்கப்பட்ட சத்யாவின் கணவருடன் அரசு மருத்துவமனை டீன் கனகராஜ் அறை முன்பு இன்று காலை திரண்டுள்ளனர்.
அப்போது பிரசவ வலியால் துடித்த சத்யாவை இரும்பு கம்பியால் தாக்கிய செவிலியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியுள்ளனர்.
Loading...