சீனாவில் மருத்துவர்களின் தவறான சிகிச்சையால் நபர் ஒருவர் 13 ஆண்டுகளாக இராட்சத கழுத்துடன் வாழ்ந்து வருவது வெளிச்சத்திற்கு வந்து அதிர வைத்துள்ளது.
55 வயதான Wang Zhixiang என்ற நபரே வினோதமான நோயால் பாதிக்கப்பட்டுள்ளார்.
கடந்த 2004ம் ஆண்டு Wang Zhixiang விபத்தில் சிக்கி கழுத்தில் காயம் ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து, அவருக்கு சிகிச்சையளித்த மருத்துவர்கள் புற்றுநோய்க்கு அளிக்கும் சிகிச்சையை தவறாக அளித்ததாக கூறப்படுகிறது.
அதன் விளைவாக Wang Zhixiang கழுத்தில் பிரச்னை ஏற்பட்டு அவரது கழுத்து பெரியதாக தொடங்கியுள்ளது.
இதன் பிறகு Wang Zhixiang வேறொரு மருத்தவரை அனுகியுள்ளார். சோதனை செய்த மருத்துவர் கழுத்தின் அடிப்பகுதியில் கட்டி இருப்பதை கண்டறிந்துள்ளார்.
இதற்கு அறுவை சிகிச்சை செய்ய இலங்கை மதிப்பில் 22 லட்சம் கேட்டுள்ளனர். Wang Zhixiang பணம் இல்லாததால் அவருக்கு சிகிச்சை மறுக்கப்பட்டுள்ளது.
தற்போது கட்டி பெரியதாகி வரும் நிலையில் ஒரு சாதாரண வாழ்ககை வாழ முடியாமல் கடும் அவதிப்பட்டு வருகிறார் Wang Zhixiang