இந்திய அணியின் தலைவரான விராட்கோஹ்லி எங்களை மதிக்காமல் திமிராக இருந்தால் அதற்கான பலனை நிச்சயம் எதிரணி வீரர்கள் அனுபவித்தே தீர வேண்டும் என்று கூறியுள்ளார்.
இந்தியா மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையேயான நான்கு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர் நேற்று முடிவடைந்தது.
இத்தொடரில் இரு அணி வீரர்களும் உணர்ச்சியை அடக்கமுடியாமல் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். குறிப்பாக இந்திய அணியின் தலைவரான விராட் கோஹ்லியை அவுஸ்திரேலிய ஊடகங்கள் திட்டமிட்டே குற்றம் சாட்டி வந்தன.
இந்நிலையில் கோஹ்லி கூறுகையில், எங்ககிட்ட ஒன்று கொடுத்தால் அதை திருப்பிக்கொடுக்கும் கேரக்டர் நாங்கள். பேச்சிற்கு மரியாதை கொடுத்தால், மதிக்கும் பக்குவம் எங்களுக்கு உள்ளது.
அதேநேரத்தில் எங்களை மதிக்காமல் திமிராக இருந்தால் அதற்கான பலனை நிச்சயம் எதிரணி வீரர்கள் அனுபவித்தே தீர வேண்டும். இந்த உள்ளூர் தொடரை ஒவ்வொரு இந்தியராலும் கண்டிப்பாக மறக்கவே முடியாது என்று கூறியுள்ளார்.