ஒரு பெண்ணின் கன்னித்தன்மையை பற்றி நவீன காலத்து ஆண்கள் கவலைப்படுவதே இல்லை என நடிகை பியா பாஜ்பாய் கூறியுள்ளார்.
சில ஆண்கள் திருமணம் செய்து கொள்ள கன்னிப்பெண்கள் தான் வேண்டும் என தேடுகின்றனர்.
ஆனால் பெரும்பாலும் அது அவர்களின் குடும்பத்தினரால். அதாவது முந்தைய தலைமுறையினரால் வலியுறுத்தப்படுவதே.
இன்றைய காலத்தில் திருமணத்துக்கு முன்னால் ஒரு உறவில் இருப்பது சகஜம். அப்போது உடல்ரீதியான நெருக்கமும் ஏற்படுகிறது.
பெற்றோர் பார்த்து நிச்சயம் செய்யும் திருமணத்தில் அது எந்த வகையில் முக்கியத்துவம் பெறுகிறது?
முதல் சந்திப்பில் அந்தப் பெண் கன்னித்தன்மையுடன் இருந்தால் அது அந்தப் பெண்ணைப் பற்றி ஏதாவது சொல்கிறதா?
ஒரு பெண்ணாக எனக்கு இதிலெல்லாம் நம்பிக்கை இல்லை, சமூகம் அதை பின்பற்றுக்கிறது என எனக்குத் தெரியும், ஆனால் இப்படிப்பட்ட பழக்கங்கள் நிறுத்தப்பட வேண்டும் என கூறியுள்ளார்.