அரசு இல்லத்தை இரண்டு வாரங்களுக்குள் காலி செய்ய வேண்டும் என பன்னீர் செல்வத்துக்கு பொதுப்பணித்துறை சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் ஆறு ஆண்டுகளாக, கிரீன்வேஸ் சாலையில் உள்ள, பொதுப்பணித் துறைக்கு சொந்தமான தென்பெண்ணை இல்லத்தில் வசித்து வந்தார்.
அவர் முதல்வர் பதவியை இழந்ததும், அரசு இல்லத்தை காலி செய்யும்படி பொதுப்பணித் துறை சார்பில், நோட்டீஸ் அனுப்பப்பட்டது.
இதனைத்தொடர்ந்து, போயஸ் கார்டன் பகுதியில் உள்ள வீனஸ் காலனியில் வாடகைக்கு வீடு எடுத்து அங்கு குடியேறினார்.
ஆனால், தென் பெண்ணை இல்லத்திற்கு தொண்டர்கள் தொடர்ந்து வந்துகொண்டிருப்பதால், ஆர்கே நகர் தேர்தல் முடியும்வரை அரசு இல்லத்தை தொண்டர்களை சந்திக்க பயன்படுத்தி வந்துள்ளார்.
மேலும், முக்கிய நிர்வாகிகளுடன் அந்த இல்லத்தில் வைத்துதான் ஆலோசனை நடத்தி வந்துள்ளார்.
இது, தினகரன் தரப்பினருக்கு எரிச்சலை ஏற்படுத்தியதை தொடர்ந்து, விரைந்து பன்னீர் செல்வத்தை அங்கிருந்து அனுப்பும் முயற்சியில் ஈடுபட்டனர்.
அதன்படியே, இரண்டு வாரங்களுக்குள், வீட்டை காலி செய்ய வேண்டும் என பன்னீர்செல்வத்திற்கு, நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது