கடுமையான குதிகால்வலி, பாதம் மற்றும் மூட்டுவலி இது போன்ற வலியை உடனடியாக போக்க இயற்கையில் உள்ள அற்புதமான தீர்வு இதோ!
தேவையான பொருட்கள்
- நெல்லிக்காய் – 10
- வெற்றிலை – 20
- கொத்தமல்லி ,கறிவேப்பிலை – ஒரு கைப்பிடி
- காய்ந்த மிளகாய் – 4
- பூண்டு – 6 பல்
- மிளகு, சீரகம் – 1 டீஸ்பூன்
- மஞ்சள் தூள் – 1/2 டீஸ்பூன்
- நல்லெண்ணெய் – 2 டீஸ்பூன்
- உப்பு – தேவையான அளவு
செய்முறை
நெல்லிக்காயின் விதைகளாஇ நீக்கி அதன் சாறு, கறிவேப்பிலை, கொத்தமல்லி இலை, வெற்றிலை ஆகிய மூன்றையும் பொடியாக நறுக்கிக் கொள்ள வேண்டும்.
பின் வெறும் கடாயில் காய்ந்த மிளகாய், பொடியாக நறுக்கிய பூண்டு, தட்டிய மிளகு, சீரகம் ஆகியவற்றை போட்டு இளம் சிவப்பாக வறுக்க வேண்டும்.
அதன் பின் பொடியாக நறுக்கிய கறிவேப்பிலை, வெற்றிலை, கொத்தமல்லி இலையை அதில் போட்டு, மஞ்சள் தூள் ஆகியவற்றை சேர்த்து வதக்க வேண்டும்.
அந்த கலவை நன்றாக வதங்கியதும் அதில் நெல்லிக்காய் சாறு, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கொதிக்க வைத்து, தேவையான அளவு உப்பு சேர்த்து இறக்கி விட வேண்டும்.
நன்மைகள்
இந்த நெல்லி ரசத்தை தினமும் குடித்து வந்தால், குதிகால் வலி எளிதில் குறைவதோடு, உயர் ரத்த அழுத்தம், இதய நோய், எலும்பு புற்றுநோய் போன்ற பிரச்சனைகள் வராமல் தடுக்கிறது.