பூசம் நட்சத்திரக்காரர்கள் சாஸ்தா வழிபாடு நடத்தினால் சகல செல்வங்களையும் பெறலாம். அறிவிற் சிறந்த முன்னோர்கள் நம் தேசத்தின் முக்கியமான சாஸ்திர கருத்துக்களை அழகாக, ஐயப்பப் பூஜை வழிபாட்டு முறையில் வைத்துள்ளார்கள்.
சபரிமலைக்குச் சென்று செய்யும் ஐயப்பப் பூஜையானது. அனைத்து வழிபாடுகளையும், சாஸ்திர விஷரங்களையும் உள்ளடக்கியதாக இருக்கிறது. பண்டிதர்கள் அறிந்த விசயத்தைப் பாமரரும் அறியும் வண்ணம் அழகாக இந்த பூஜையில் நம் பெரியோர்கள் வடிவமைத்திருக்கிறார்கள். இதுபோன்ற ஓர் அற்புதமான வாழிபாட்டு முறையைக் காண்பது அரிது.
ஐயப்பன் வழிபாட்டில் பல தத்துவங்கள் அடங்கி இருக் கின்றன. மாலை போட்டுக் கொண்டு 48 நாட்களுக்கு விரதம் இருத்தல், நாள் தோறும் வழிபடுதல், உணவு கட்டுப்பாடு முதலிய பல விஷயங்கள் உள்ளன. சபரிமலைக்கு பக்தியோடு கிளம்பிச் செல்லுதல், பார்ப்பவர்களை எல்லாம் சுவாமி என்று அழைத்தல், பெண்களை மாளிகைபுரம் என்று கூறுதல் என நம்முடைய பாவனை மாறுவதை கவனிக்கவேண்டும்.
ஐயப்பனுக்கு தர்ம சாஸ்தா என்று பெயர். ஐயப்பனின் ஒரு கை வரமளிக்கிறது. மற்றொரு கையில் சின்முதிரை இருக்கிறது. கட்டை விரல் பரமாத்மாவாகிய கடவுளைக் குறிக்கிறது. ஆள் காட்டி விரல் ஜீவாத்மாவாகிய உயிரைக் குறிக்கிறது.
அது கடவுளை விட்டு எப்போதும் தள்ளியே இருக்கிறது. நம் மனம் சில நேரத்தில் அமைதியாகவும், சில நேரம் பரபரப்பாகவும், சில நேரம் மந்தமாகவும் இருக்கும். ஜீவாத்மா எப்பொழுதும் இவற்றோடு சேர்ந்திருக்கிறது. ஜீவாத்மா உலகை நோக்கியே சென்று கொண்டிருப்பதால் நிம்மதி இழந்து காணப்படுகிறது.
ஜீவாத்மா பரமாத்மாவோடு இணைந்து விட்டால் நிம்மதி தானாக ஏற்படும்.
‘எந்த ஓர் ஆனந்தத்தை தேடி கொண்டு நீ என்னிடம் வருகிறாயோ, அந்த ஆனந்தம் நீயே ஐயப்பா’ என்று ஐயப்பன் சொல்கிறார். நம்மை அவர் ஐயப்பா என்று அழைக்கிறார். ‘நீயே நான், நானே நீ, நீ வேறு நான் வேறு அல்ல. நீயே ஆனந்தம் நீ என்னைத் தேடி வருகிறாய். நான் உன்னை விட்டு ஒரு பொழுதும் பிரியவே இல்லை. நான் சபரிமலையில் எங்கோ ஒரு மூலையில் இருப்பவன் என்று நினைத்தாயா நான் எங்கும் நீக்கமற நிறைந்தவன்’.
இங்கிருந்து கிளம்பி சபரிமலைக்குச் சென்று ஐயப்பனை தரிசிப்பது மட்டும் குறிக்கோள் அல்ல. இந்தப் பயணமே ஆனந்தம். விரதமே ஆனந்தம். மாலை போடுவதே ஆனந்தம். இருமுடி கட்டுவதே ஆனந்தம். கிளம்பி சபரிமலை நோக்கிப் பயணிப்பதும் ஆனந்தம். எப்பொழுது-ம் எதற்காகவும் நாம் அழவேண்டிய அவசியமில்லை. எப்பொழுதும் சந்தோஷமாக இருப்பதற்காகத்தான் பிறந்திருக்கிறோம்.
எதைப்படிக்க வேண்டுமோ, அதைப் படிக்காததால் நாம் துன்பப்படுகிறோம்’. படிக்க வேண்டியதைப் படி, அந்த ஆனந்தம் நீ தான்’ என்பதைதான் ஐயப்பன் சொல்லிக் கொடுக்கிறார். தர்மத்தை கற்று கொடுப்பவர் தான் ஐயப்பன். மெய்ஞானத் தைக் கற்றுக் கொடுப்பவர் ஐயப்பன்.
பூச நட்சத்திரக்காரர்கள் ஐயப்பனின் மூல மந்திரமாகிய சுவாமி சரணம் என்பதை ஓதிக்கொண்டே இருங்கள். காரிய தடை நீங்கி சகல யோகங்கள் பெறலாம்.
நட்சத்திர வரிசையில் பூசம் எட்டாவது நட்சத்திரமாகும். மை மாதப் பூச நட்சத்திரம் பெரும்பாலும் பவுர்ணமியில் வரும். முருகனுக்கு உகந்த நாள் தைப்பூச தினம்.