கர்நாடகாவில் ஜோதிடரின் பேச்சை நம்பி 10 குழந்தைகளை பெற்றேடுத்த தந்தையின் செயல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடகாவைச் சேர்ந்தவர் ராமகிருஷ்ணப்பா(47). இவர் பாக்கியம்மா(32) என்ற பெண்ணை 23 ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் செய்துள்ளார்.
திருமணம் செய்த நேரத்தில் ஜோதிடர் ஒருவர் உங்களுக்கு ஆண் குழந்தை பிறந்தால், வாழ்க்கை பிரகாசமாக இருக்கும் என்றும் வசதிகள் பெருகி அமோகமாக வாழ்வீர்கள் என்று கூறியுள்ளார்.
இதனால் அந்த தம்பதிகளுக்கு ஆண் குழந்தை மீது நாட்டம் ஏற்பட்டுள்ளது. ஆனால் அவர்களுக்கு முதலில் பெண் குழந்தை தான் பிறந்தது. இதைத் தொடர்ந்து அவர்களுக்கு 9 பெண் குழந்தைகள் பிறந்துள்ளது.
இதற்கிடையில் ஆண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது. ஆனால் பிறந்த சில மணி நேரங்களிலே அக்குழந்தை இறந்துவிட்டது.
இதைக் கண்ட கிராமத்தினர் அவர்களை கிண்டல் செய்துள்ளனர். உங்களுக்கு தொடர்ந்து பெண் குழந்தை தான் பிறக்கும் என்று கூறியுள்ளனர். ஆனாலும் ராமகிருஷ்ணன் திடமாக தனக்கு ஆண் குழந்தை பிறக்கும் என்று கூறியுள்ளார்.
இந்நிலையில் 10வது முறையாக பாக்கியம்மா மீண்டும் கர்ப்பம் அடைந்து, தற்போது ஒரு அழகிய ஆண் குழந்தையை பெற்றெடுத்துள்ளார்.
தங்களின் ஆசை தற்போது நிறைவேறிவிட்டது எனவும், இனிமேல் தங்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்படும் என ராமகிருஷ்ணப்பா கூறியுள்ளார்.