தெருவில் கிடந்த தங்க சங்கலியை கண்டெடுத்த மாணவர்கள் அதனை பாடசாலை அதிபரிடம் ஒப்படைந்துள்ளனர்.
அம்பலந்தொட்டை, டேரபுத்த பாலர் பாடசாலையின் பிரதான நுழைவாயிலுக்கு அருகாமையில் இந்த தங்க சங்கிலி ஐந்தாமாண்டு மாணவர்களினால் மீட்கப்பட்டுள்ளது.
பென்டனுடன் கண்டெடுத்த தங்க சங்கிலியை பாடசாலை அதிபரிடம் ஒப்படைத்துள்ளனர். மாணவர்களின் நேர்மையான குணத்தை கண்டு பாடசாலை அதிபர் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
குறித்த பாடசாலையில் கல்வி கற்றும் ஐந்தாம் வகுப்பு மாணவியான என்.ஏ.பியுமி அஹின்சாவினால் தங்க சங்கலி கண்டெடுக்கப்பட்டுள்ளது. இதன்போது மேலும் மூன்று மாணவர்களும் அவருடன் இருந்துள்ளனர்.
கடந்த 18ஆம் திகதி பாடசாலை நேரத்தில் பாடசாலைக்கு அருகில் விழுந்து கிடந்த இந்த தங்க சங்கிலியை மாணவர்கள் பார்த்துள்ளனர். இதனை எடுத்து சென்ற மாணவர்கள் அதிபரிடம் ஒப்படைத்துள்ளனர். அதன் பின்னர் உரிமையாளர்களிடம் இந்த சங்கிலி ஒப்படைக்கப்பட்டுள்ளது.
பின்னர் சங்கிலியின் உரிமையாளர் குறித்த மாணவர்களின் நேர்மையை கண்டு பெறுமதியான பரிசு பொருட்களை வழங்கியுள்ளதாக ரெிவிக்கப்படுகின்றது.
இவ்வளவு நேர்மையாக பிள்ளைகளை வளர்ப்பதற்கு பெற்றோர் நடவடிக்கை மேற்கொண்டுள்ளமை மற்றும் இந்த மாணவர்கள் ஏனைய மாணவர்களுக்கு எடுத்துக்காட்டாகியுள்ளார்கள் என அதிபர் உட்பட அனைவரும் பாராட்டுக்களை தெரிவித்துள்ளனர்.