ஆர்.கே நகர் தொகுதியில் தனது முதல் பொதுக்கூட்ட உரையில் தீபா அதிகமாக பேசாமல் வெறும் 15 நிமிடங்கள் மட்டுமே பேசியுள்ளார்.
ஆர். கே.நகர் தொகுதிக்கான இடைத்தேர்தல் வரும் 12ஆம் திகதி நடைபெறவுள்ளது.
ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா இந்த தொகுதியில் படகு சின்னத்தில் போட்டியிடுகிறார். இதனைத் தொடர்ந்து முதல் பொதுக்கூட்டத்தில் அவர் உரையாற்றினார்.
பொதுக்கூட்டத்துக்கு தீபா இரண்டு மணி நேரம் தாமதமாக வந்தார். ஜெயலலிதா போலவே கட்சி நிர்வாகிகளுடன் ஒன்றாக அமராமல் தனி இருக்கை போட்டு தீபா அமர்ந்தார்.
மேலும், தீபா கூட்டத்துக்கு வந்த போது மக்கள் அவரை நெருங்காத வண்ணம் அவரின் தனியார் பாதுகாப்பு ஊழியர்கள் தடுப்பு பணியில் ஈடுப்பட்டனர்.
இதையெல்லாம் பார்த்த மக்கள் இந்தம்மா இப்பவே இப்படி கெத்து காட்டுது, எம்.எல்.ஏ ஆகிட்டா, என்னவெல்லாம் செய்யுமோ என குமுறியுள்ளார்கள்.