SpaceX மற்றும் Tesla ஆற்றல் சேமிப்பு மற்றும் விண்வெளி உற்பத்தி நிறுவனத்தின் தலைவர் Elon Musk நியூராலிங் என்னும் ஒரு நிறுவனத்தை தொடங்கியுள்ளார்.
இந்த நிறுவனத்தின் முக்கிய நோக்கம் என்னவெனில், மனித மூளையில் ஒரு கருவியை பொருத்தி அதன் மூலம் முளையில் செயல்பாடுகள் கண்காணிப்பது தான்.
அதாவது, மனித மூளையுடன் செயற்கை நுண்ணறிவு இணைத்தல் என்பதே இத்திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.
இந்த கருவியை பொருத்துவதன் மூலம் மூளையில் நினைவாற்றலை அதிகப்படுத்த முடியும் என Elon கூறியுள்ளார்.
நியூராலிங் தொடர்பான பணிகள் தற்போது தான் ஆரம்பகட்டத்தில் உள்ளன. இதற்கான பயணம் இன்னும் வெகு தூரம் உள்ளது என தெரிகிறது. உயிரியலும், டிஜிட்டல் தொழில்நுட்பமும் ஒரு நாள் இணையும் என Elon முன்பே கூறியிருந்தார்.
அதை அவர் தற்போது செயல்படுத்த தொடங்கியுள்ளார். ஒருவர் மூளைச்சாவு அடைந்தால் அவர் மூளையில் பொருத்தும் இந்த கருவியை வைத்து கூட அவரை குணப்படுத்த முடியும்.
ஆனால் இதில் பல சவால்களும். ஆபத்துக்களும் இருப்பதாக தெரியவந்துள்ளது.
மேலும், இந்த தொழில்நுட்பத்தின் மூலம் மனித மூளையை ஹேக் செய்ய கூட சாத்தியம் உண்டு என நம்பப்படுகிறது.