Loading...
ராஜு முருகன் இயக்கத்தில் வெளியான `குக்கூ’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான மாளவிகா நாயர் நீண்ட இடைவேளைக்குப் பின்னர் மீண்டும் தமிழ் படம் ஒன்றில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். `குக்கூ’ படத்தில் தினேஷ் ஜோடியாக கண் தெரியாத பெண்ணாக நடித்து அனைவரது நெஞ்சையும் உருகச் செய்த அவர், தனது இயல்பான நடிப்பால் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம்பிடித்தார். மேலும் அப்படத்திற்காக சிறந்த அறிமுக நடிகைக்கான பிலிம்ஃபேர் விருதையும் வென்றிருந்தார்.
இந்நிலையில், தனது கல்லூரி படிப்பை முடித்த மாளவிகா, மீண்டும் தமிழில் `அரசியல்ல இதெல்லாம் சாதாரணப்பா’ என்ற படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். அவினாஷ் ஹரிஹரன் என்ற புதுமுக இயக்குநர் இயக்கும் இப்படத்தில் `ராஜதந்திரம்’ பட புகழ் வீரா ஜோடியாக மாளவிகா நடிக்கிறார்.
அரசியல் கலந்த காமெடி படமாக உருவாக உள்ள இப்படத்தை, ஆரா சினிமாஸ் சார்பில் மகேஷ் கோவிந்தராஜ் தயாரிக்கிறார். கடந்த வாரம் பாண்டிச்சேரியில் துவங்கிய இப்படத்தின் படப்பிடிப்பு தொடர்ந்து விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
Loading...