Loading...
குழந்தைப் பேறு ஆயுட்காலத்தை அதிகரிப்பதாக சுவீடனில் நடத்தப்பட்ட ஆய்வொன்றின் மூலம் தெரியவந்துள்ளது.
சுமார் 15 லட்சம், ஆண்கள் மற்றும் பெண்கள் குறித்த ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டனர். இதில் குறைந்தது ஒரே ஒரு குழந்தையையாவது பெற்றவர்கள், குழந்தைகள் ஏதும் பெறாதவர்களைக் காட்டிலும், குறைவான இறப்பு ஆபத்தையே எதிர்கொள்வதாக ஆய்வு முடிவில் தெரியவந்தது.
Loading...
குழந்தை பெற்றவர்களுக்கும், பெறாதவர்களுக்கும், ஆயுட்கால எதிர்பார்ப்பில் உள்ள இடைவெளி என்பது, அவர்களது 60வது வயதில், ஆண்களுக்கு இரண்டு ஆண்டுகளாகவும், பெண்களுக்கு ஒன்றரை ஆண்டுகளாகவும் இருக்கிறது என்று அந்த ஆய்வு கண்டறிந்தது.
இந்த ஆய்வில் 1911லிருந்து 1925 வரையிலான காலகட்டத்தில் பிறந்தவர்களை விஞ்ஞானிகள் பரிசோதித்தமை குறிப்பிடத்தக்கது.
Loading...