இலங்கையில் மேற்கொள்ளப்படுகின்ற சீனாவின் முக்கிய பிரதான இரு பாரிய திட்டங்களான துறைமுகர் நகர் மற்றும் அம்பந்தோட்டை துறைமுகம் மற்றும் சுதந்திர வர்த்தக வலய திட்டங்கள் தொடர்பாக அரசாங்கம் முக்கிய நகர்வுகளை மேற்கொள்ள உத்தேசித்துள்ளது.
துறைமுக நகர் திட்டத்தின் ஒப்பந்தத்தில் காணப்பட்ட சர்ச்சைக்குறிய விடயங்கள் திருத்தப்பட்டு ஒப்பந்தம் இரு தரப்பினராலும் கைச்சாத்திடப்பட்டுள்ளதாக அபிவிருத்தி உபாய முறைகள் மற்றும் சர்வதேச வர்த்தக இராஜாங்க அமைச்சர் நிரோஷன் பெரேரா தெரிவித்தார்.
எனினும் சீனாவின் அம்பாந்தோட்டை திட்டங்களில் காணப்படும் சிக்கல்களை நிவர்த்தி செய்வதற்காக அமைச்சர் சரத் அமுனுகம தலைமையிலான அமைச்சரவை உப நடவடிக்கைகளை முன்னெத்து வருகின்றது. ஆனால் இந்த திட்டத்திற்கான ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் கால எல்லையை தற்போது கூற முடியாது எனவும் அவர் குறிப்பிட்டார்.