Loading...
சென்னை மெரினாவில் ஹட்ரோகார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும்,டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகளுக்கு ஆதரவாகவும் போராட்டத்தில் ஈடுபட இருப்பதாக கடந்த இரண்டு நாட்களாக சமூக வலைதளங்களான பேஸ்புக்,வாட்ஸ்ஆப்,டிவிட்டர் ஆகியவற்றில் இளைஞர்களுக்கு தொடர்ந்து அழைப்பு விடுக்கப்பட்டு வந்தது.
இதையடுத்து நேற்று மாலை முதலே மெரினா கடற்கரை சுற்றிலும் காவல்துறை கண்காணிப்பு அதிகப்படுத்தப் பட்டது. இது டிவிகள் நேரலை மூலம் ஔிபரப்பப் பட்ட நிலையில் நேற்று இரவு தமிழகத்தின் பல்வேறு இடங்களில் இன்று காலை முதல் போராட்டம் நடத்த இருப்பதாக இளைஞர்கள் அழைப்பு விடுத்தனர்.
இன்று காலை 8 மணி முதல் போராட்டம் தொடங்கும் என்று பதிவுகளில் அதிக அளவில் பார்க்க முடிந்தது. இதையடுத்து மெரினாவில் இளைஞர்கள் பிரிந்து பிரிந்து நின்று இருந்தார்கள். அவர்களை கண்டித்து காவல் துறையினர் அனுப்பிவைத்தார்கள். அதன் பின்னரும் பல இடங்களில் மாணவர்கள் தொடர்ந்து மெரினாவில் கூடியிருந்தார்கள்.
மதியம் திடீர் என்று சில இளைஞர்கள் கடலில் இறங்கி போராட்டம் நடத்த தொடங்கினார்கள். சிலரை அப்புறப்படுத்தினார்கள். சிலர் தொடர்ந்து கடலில் நின்று போராட்டம் செய்தனர்.
போராட்டம் நடத்த போவதாக அறிவிப்பு வந்ததை தொடர்ந்து மெரினாவில் இருக்கும் 4000 கடைகளை மூட உத்தரவிட்டதால் வியாபாரிகள் அதிக அளவில் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள்.
போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்களை கைது செய்து அழைத்து சென்றார்கள். நாங்கள் கைது செய்யப்பட்டாலும் விவசாயிகளுக்கு ஆதரவாக போராட்டம் தொடரும் என்கிறார்கள் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள்.
Loading...