Loading...
வரும் மார்ச் 31-ம் தேதி தமிழில் மூன்று எதிர்பார்ப்புக்குறிய படங்கள் வெளியாகவுள்ளது. இதில் விஜய்
சேதுபதி நடித்துள்ள கவண் மற்றும் நயன்தாரா நடித்துள்ள டோரா ஆகிய படங்கள் முன்னணி நடிகர்கள் நடித்திருப்பதால்
ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆனால் உண்மைச்சம்பவத்தை மையப்படுத்தி ஸ்டீஃவன் இயக்கத்தில் புதுமுகங்கள் ரிஷி ரித்விக் – அர்ச்சனா கவி
நடித்திருக்கும் ‘அட்டு’ படத்துக்கும் இதற்கு இணையான எதிர்பார்ப்பு உருவாகி இருப்பது அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது.
தரமான படைப்பில் யார் நடித்திருந்தாலும் தயங்காமல் வெற்றிபெற வைக்கும் நேர்மையான தமிழ் சினிமா ரசிகர்கள்
அட்டு படத்தை ரிலீஸுக்கு முன்பே லைம் லைட்டுக்கு கொண்டு வந்திருக்கிறார்கள்.
இதற்கு இரண்டு விஷயங்கள் மிகமுக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. ஒன்று போபோ ஷசியின் இசையில் வெளியான
இப்படத்தின் பாடல்கள் எல்லா தரப்பினரையும் வெகுவாக கவர்ந்துள்ளது. மற்றொன்று இப்படத்தின் விநியோக
உரிமையை கைப்பற்றியிருக்கும் ஆர்.கே.சுரேஷ்.
சலீம், தர்மதுரை உள்ளிட்ட படங்களின் மூலம் தயாரிப்பாளராகவும் நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம், சூது கவ்வும்,
தங்க மீன்கள், இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா உள்ளிட்ட படங்களின் மூலம் விநியோகஸ்தராகவும் தமிழ்
சினிமாவுக்கு பல தரமான படைப்புகளை கொடுத்துள்ள ஆர்.கே.சுரேஷ், இப்படத்தின் விநியோக உரிமையை
வாங்கியிருப்பதால் ரிலீஸுக்கு முன்பே இப்படத்தின் தரம் நிரூபணமாகியுள்ளது. இதனால் கவண், டோராவுக்கு
இணையாக இந்த படத்தையும் உச்சத்துக்கு கொண்டு வந்திருக்கிறார்கள் தமிழ் சினிமா ரசிகர்கள்.
Loading...