முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை கடவுளுக்கு நிகராக வழிபட்டு வரும் மக்களும் இருப்பதாக கூறப்படுகின்றது.
அந்த வகையில் மகிந்தவின் புகைப்படத்தை கடவுள்களின் புகைப்படமாக ஒப்பிட்டு, வழிபட்டு வருவதாக கூறப்படும் புகைப்படம் ஒன்று தற்போது வைரலாக பரவி வருகின்றது.
வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள குடும்பம் ஒன்று இவ்வாறு மகிந்தவின் புகைப்படத்தைக் கொண்டு வழிபட்டு வருவதாக கூறப்படுகின்றது.
ஒரு பக்கம் மகிந்த மீது பல்வேறு வகையான குற்றச்சாட்டுக்கள் கூறப்பட்டாலும், அடிமட்ட ஆதரவாளர்களும் அவருக்கு இன்றும் இருப்பதாக கூறப்படுகின்றது.
மேலும் குறித்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் பரப்பப்பட்டு “துட்டகை முனு மன்னனின் பரம்பரையில் உதித்த மாமன்னன் மகிந்தவினால் முழு நாட்டு மக்களுக்கும் சக்தி”.
“அவரை இவ்வாறு வணங்குவது ஏற்கக் கூடிய ஒன்று” என பல வகையான விமர்சனங்கள் கூறுகின்றன.
இதேவேளை அரசியல் வாதிகளை சரியாக புரிந்து கொள்ளாத மக்கள் இருக்கும் வரை, அரசியல்வாதிகள் வளர்ந்து கொண்டே போவார்கள் எனவும் தெரிவிக்கப்படுகின்றன.