உலகளவில் விசித்திரமான பாராளுமன்றம் இலங்கையில் மட்டுமே அமைந்திருப்பதாக நீதி மற்றும் புத்த சாசன அமைச்சர் விஜயதாச ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.
நாரஹேன்பிட்டியவில் அமைந்துள்ள ராமநிக்காய சங்கத்தின் தலைமையகத்தில் இடம்பெற்ற சபாநாயகருக்கான ரனரஞ்சன கௌரவிப்பு நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். தொடர்ந்து உரையாற்றுகையில்,
இரு பிரதான காட்சிகள் ஒன்றிணைந்து அதில் ஒரு கட்சி மட்டும் பல பிரிவாக பிரிந்து பாராளுமன்றத்தில் செயற்படும் அனுபவமானது இலங்கையில் முதன் முதலாக இடம்பெறுகின்றது.
இவ்வாறு இரு பிரதான கட்சிகளால் அமையப்பெற்ற தேசிய அரசாங்கத்தில் தனியார் கொள்கைகளுக்கு தமது பூரண எதிர்ப்பினை சுதந்திர கட்சி வெளியிட்டு வருகின்றது.
ஆனால் அதற்கு மாறாக ஐக்கிய தேசிய கட்சி புதிய கொள்கைகளை வகுத்து வருகின்றது.
இந்த நிலையில், நாட்டினை ஒரு நிலையான பாதையில் கொண்டு செல்வது சிரமமான விடயம், இருப்பினும் அது முழுமையான வெற்றியை தந்துள்ளது.
இவ்வாறு உலகத்தில் இரு எதிரான காட்சிகள் ஒன்றிணைந்து ஆட்சி அமைப்பதானது இதுவே முதல் தடவை, இப்படி ஒரு விசித்திரமான பாராளுமன்றம் அமைந்திருப்பதானது உலகில் இதுவே முதல் தடவை என அமைச்சர் விஜயதாச ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.