மெக்சிகோவில் விமான ஓடு பாதையில் செல்பி எடுத்த இரண்டு பெண்கள் மீது விமானம் மோதியதில் இருவரும் பலியாகியுள்ளனர்.
மெக்சிகோவின் Chihuahua மாநிலத்தை சேர்ந்தவர்கள் Nitzia Mendoza Corral (18) மற்றும் Clarissa Morquecho Miranda (17).
Nitzia சட்டப்படிப்பு படித்து வருகிறார். அவர் தோழி Clarissa பள்ளிப்படிப்பை முடித்துள்ளார்.
இந்நிலையில், இளம் பெண்களான இவர்கள் அங்குள்ள விமான நிலையத்தின் ஓடுபாதைக்கு நேற்று சென்றுள்ளனர்.
பின்னர் அங்கிருந்த ஒரு வாகனத்தின் பின்பிறம் நின்று கொண்டு இருவரும் செல்போனில் செல்பி எடுத்து கொண்டிருந்தனர்.
அப்போது அந்த வாகனத்தை உரசுவது போல வந்த ஒரு விமானத்தின் இறக்கை இரு பெண்களின் கழுத்தின் மீதும் வேகமாக மோதியுள்ளது.
இந்த விபத்தில் இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார்கள்.
அருகிலிருந்தவர்கள், இருவரையும் அங்கு நிற்காதீர்கள் என கூறியும் அதை அவர்கள் பொருட்படுத்தவில்லை என தெரியவந்துள்ளது.
இந்த சம்பவம் குறித்து பொலிசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.