Loading...
இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த சேலி தாம்சன் என்ற பெண் காலை உணவுக்கு அவித்த முட்டையை சாப்பிட்டுக் கொண்டிருந்த போது, நறுக்கென்று ஒன்று அவர் பல்லில் சிக்கியது. கோவத்தில் என்னவென்று பார்த்தவருக்கு காத்திருந்தது ஒரு ஆச்சரியம்.
அது குபிக் சிர்கோனியா என்ற ஒரு வகை வைரக்கல். இதுகுறித்து தனது ஃபேஸ்புக்கில் பகிர்ந்துகொண்ட அவருக்கு பலதரப்பிலிருந்தும் முட்டைக்குள் வைரக்கல் எப்படி சிக்கியிருக்கும் என்பதற்கான விளக்கங்கள் அளித்தனர்.
ஒருவேளை, கோழி அந்தக் கல்லை விழுங்கியிருக்கலாம். பின்னர் அந்த கல், செரிமாணம் ஆகாமல், முட்டைக்குள் சிக்கியிருக்கலாம் என்று பலர் பல விதமான கருத்துகளை தெரிவித்தனர்.
Loading...
எது எப்படியோ, விரைவில் திருமணம் செய்துகொள்ள போகும் தாம்சனுக்கு இது நல்ல வெகுமதியாக தோன்றுகிறதாம்.
Loading...