இந்திய அணித்தலைவர் விராட் கோஹ்லியை அவுஸ்திரேலிய பத்திரிகைகள் வறுத்தெடுத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடிய அவுஸ்திரேலிய அணி 1-2 என இந்தியாவிடம் தொடரை இழந்தது.
முன்னதாக, போட்டியின் போது ஏற்பட்ட டிஆர்எஸ் விவகாரத்தில் கோஹ்லியை டிரம்புடன் ஒப்பிட்ட விமர்சித்தது அவுஸ்திரேலிய பத்திரிகைகள்.
தொடரை இழந்த நிலையில், தற்போது அவுஸ்திரேலிய பத்திரிகைகள் கோஹ்லியை கடுமையாக விமர்சித்துள்ளன.
கோஹ்லி ஈகோ பிடித்தவர், கிளாஸ் விரர் கிடையாது என டெய்லி டெலிகிராப் பத்திரிகை குறிப்பிட்டுள்ளது.
ஹெரால்ட் சன் பத்திரிகையில், மன்னிப்பு என்ற வார்த்தையை கோஹ்லி கூற வேண்டும் என வெளியிட்டுள்ளது.
தி அவுஸ்திரேலியன் பத்திரிகையின் பீட்டர் லலோர் எழுதுகையில், விளையாட்டின் ஸ்ப்ரிட் இந்திய அணிக்கு இல்லை. எனவேதான் அவுஸ்திரேலிய அணித்தலைவர் சேர்ந்து பீர் குடிக்கலாம் என அழைத்த கோரிக்கையை நிராகரித்துவிட்டது என்று தெரிவித்துள்ளார்.