Loading...
பாக்டீரியா மற்றும் நச்சுகளின் தாக்கம் நமது உடலில் அதிகரிப்பதால், உடல் உறுப்புகளின் செயல்திறன் மற்றும் ஆரோக்கியத்தை பாதிப்படையச் செய்கிறது.
எனவே அன்றாடம் நாம் சத்துக்கள் நிறைந்த உணவுகளை சாப்பிட்டு வந்தால், உடலின் ஆரோக்கியத்தை மேம்படுத்தலாம்.
அந்த வகையில், இரத்தத்தை சுத்திகரிப்பு செய்து, இதய நலனை ஊக்குவிக்க அற்புதமான ஜூஸ் இதோ!
Loading...
தேவையான பொருட்கள்
- ஆப்பிள் – 1
- தேங்காய் – 2 துண்டுகள்
- இஞ்சி பவுடர் – சிறிதளவு
- ஐஸ் கியூப் – 3
செய்முறை
ஆப்பிளின் நடுப்பகுதியை நீக்கி, அதை சிறு துண்டுகளாக வெட்டி அரைத்துக் கொள்ள வேண்டும்.
பின் அதனுடன் தேங்காய் மற்றும் இஞ்சி பவுடர் சேர்த்து மீண்டும் நன்றாக அரைத்தால், ஜூஸ் தயார்.
இந்த ஜூஸில் விட்டமின் A, B, B1, B2, B6, C, E மற்றும் K போன்ற சத்துக்கள் ஏராளமாக நிறைந்துள்ளது. எனவே இதை தினமும் குடித்து வந்தால் ஏராளமான நன்மைகளை பெறலாம்.
நன்மைகள்
- ஆப்பிள், தேங்காய் மற்றும் இஞ்சி சேர்த்து தயாரிக்கப்படும் இந்த ஜூஸை குடித்து வருவதால் ஸ்ட்ரோக் ஏற்படும் அபாயம் குறையும்.
- உடலில் பாக்டீரியாக்கள் அதிகரிக்காமல் பாதுகாக்கவும், நீரிழிவை கட்டுப்படுத்தவும் இந்த ஜூஸ் உதவுகிறது.
- இஞ்சி கலந்த இந்த ஜூஸை குடிப்பதால், கிருமி நாசினியாக பயன்படுவதுடன், செரிமான சிக்கல்கள் ஏற்படாமல் தடுக்கிறது.
- நமது உடம்பில் கொலஸ்ட்ரால் அதிகரிப்பதைத் தடுத்து, இதயத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்த இந்த ஜூஸ் சீரான முறையில் உதவுகிறது.
- குடல் பிரச்சனைகள் ஏற்படாமல் இருக்கவும், இரத்தத்தை சுத்திகரிப்பு செய்யவும் ஆப்பிள், தேங்காய், இஞ்சி கொண்டு தயாரிக்கப்படும் இந்த ஜூஸ் பயன்படுகிறது.
- உடலில் ஏதேனும் கட்டிகள் உருகாமல் இருக்க, வயிற்றுப்போக்கை தடுக்க, உடல் பருமனை குறைக்க இது போன்ற பிரச்சனைகளுக்கு தீர்வாக உள்ளது.
Loading...