Loading...
அஜித்தின் விவேகம் படத்தின் படப்பிடிப்பு பல்கேரியாவில் நடந்து வருகிறது. இந்த படப்பிடிப்பில் அஜித், காஜல் அகர்வால் முக்கிய காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறது.
தற்போது இப்படத்தில் அஜித்தின் பெயர் பற்றி ஒரு புதிய செய்தி உலா வருகிறது. படத்தில் அஜித்தின் பெயர் விவேக் என்று கூறப்படுகிறது. விவேக் என்ற கதாபாத்திரமும் தமிழ் நாவல் ரசிகர்களுக்கு நல்ல பரிச்சயம். பிரபல க்ரைம் எழுத்தாளர் ராஜேஷ் குமார் நாவல்களில் வரும் துப்பறியும் கதாபாத்திரம்தான் விவேக்.
Loading...
இதேபோல் ஒரு துப்பறியும் கதைதான் விவேகம் என்பதால் அஜித்துக்கு விவேக் என்றே பெயர் வைத்திருக்கிறாராம் சிவா. ஆனால் இந்த தகவல் எந்தளவுக்கு உண்மை என்பது தெரியவில்லை.
Loading...