Loading...
மணிரத்னம் இயக்கத்தில் 20 வருடங்களுக்கு முன்னர் வெளியான படம் `இருவர்’. மோகன்லால், பிரகாஷ் ராஜ், நாசர், ஐஸ்வர்யா ராய், தபு, கௌதமி உள்ளிட்ட பலரும் நடித்து அரசியல் பின்னணியில் உருவாகிய இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
இந்நிலையில். மோகன்லால்-பிரகாஷ்ராஜ் இணைந்து மலையாளத்தில் புதிய படம் ஒன்றில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளனர். `ஒடியன்’ என்று பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை ஸ்ரீகுமார் இயக்குகிறார். இப்படத்தில் மோகன்லாலுக்கு வில்லனாக பிரகாஷ் ராஜ் நடிக்க உள்ளார்.
மஞ்சு வாரியர் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்க உள்ள இப்படத்திற்கு, எம்.ஜெயச்சந்திரன் இசையமைக்க உள்ளார். வருகிற 2018-ஆம் ஆண்டில் இப்படம் திரைக்கு வர உள்ளது.
Loading...