நம் அன்றாட பழக்கவழக்கங்களில் சில பழக்கங்கள் நமக்கு பாதிப்பினை ஏற்படுத்துகின்றது. நம்மில் பலருக்கும் கழிப்பறையில் அதிகமான நேரம் இருக்கும் பழக்கமிருக்கும்.
ஆனால், கழிப்பறையில் 15நிமிடங்களுக்கு மேலாக இருப்பது நமது உடலுக்கு பாதிப்பினை உண்டாக்கும் என்பதை ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
இதுகுறித்து அமெரிக்காவின் பிட்ஸ்பர்க் பல்கலைகழகத்தினை சேர்ந்த Gregory Thorkelson என்பவர் மேற்கொண்ட ஆய்வில் கழிவறையில் அதிக நேரம் அமர்ந்து இருப்பவர்களுக்கு மூலம், செரிமான கோளாறு உள்ளிட்ட பல பிரச்சனைகள் ஏற்படுவதை கண்டறிந்துள்ளார்.
நாம் உட்கொள்ளும் உணவானது செரிமானமடைவதற்கு பல நிலைகள் உள்ளது. பெருங்குடலில் உணவானது செரிமானமடைந்து உணவில் உள்ள சத்துக்கள் உறிஞ்சப்பட்டப்பின் கழிவுகள் வெளியேற்றப்படுகிறது.
பெரும்பாலும் தற்போது மேற்கத்திய முறையிலேயே கழிப்பறைகளானது அமைந்துள்ளது. இவை வசதியாக இருந்தாலும் உடலுக்கு கூறு விளைவிப்பவையாகும்.
இந்த கழிப்பறைகளை நாம் அதிகநேரம் உபயோகிக்கும்போது நாம் கொடுக்கும் அதிக அழுத்தமானது பெருங்குடலின் இயக்கத்தினை பாதிக்கும்.
மேலும், இதனால் இரத்தகசிவு, மலச்சிக்கல், மூலம் போன்ற நோய்களானது ஏற்படுகிறது.
இத்தகைய பாதிப்பினை நாம் தவிர்ப்பதற்கு இந்திய முறையில் அமைக்கப்படும் கழிப்பறைகளே சிறந்தவை.
தவிர்க்க முடியாத காரணங்களால் மேற்கத்திய கழிப்பறைகளை பயன்படுத்த நேரிட்டால் கால்களை சற்று உயர்த்தி வைத்து கொள்வதால் இந்த பாதிப்பினை குறைக்கலாம்.