நம் உடலில் நோய் ஏற்படவுள்ளதை அதன் அறிகுறி மூலமாக கூட அறிந்து கொள்ளலாம்.
சில சமயங்களில் நமக்கு ஏற்படும் காய்ச்சல், தலைவலி போன்றவை கூட நம் உடல் ஆரோக்கியத்தில் ஏற்பட்டுள்ள ஏதேனும் ஒரு பாதிப்பின் அறிகுறியாக வெளிப்படுகிறது.
கண்கள் வீக்கம்
நமது கண்கள் உப்பி இருந்தால் சிறுநீரகங்களின் செயல்பாடானது சீராக இல்லை என்று அர்த்தம்.
உடலில் உள்ள கழிவுகளை நீராக சிறுநீரகம் வெளியேற்றுகிறது. அது சரியாக செயல்படவில்லை எனில் கழிவுகள் நமது உடலிலேயே தங்கிவிடுகிறது.
இந்த அசுத்தநீர் வெளியேறாமல் கண்களை சுற்றி தேங்கிவிடுவதால் கண்களானது வீங்கி காணப்படும்.
இதனை தவிர்ப்பதற்கு உணவில் உப்பின் அளவினை குறைத்து கொண்டு, அதிக அளவில் நீர் அருந்த வேண்டும்.
கண் இமைகளில் வலி
உடலில் மக்னீசிய குறைப்பாட்டினாலும், அதிக நேரம் வேலை பார்ப்பதாலும் கண்களானது சோர்வடைந்து, இமைகளில் வலி உண்டாகிறது.
இதனை தடுக்க முட்டைகோஸ் மற்றும் கீரை போன்றவற்றினை நமது உணவில் அதிகமாக சேர்த்து கொண்டு, போதுமான அளவிற்கு ஓய்வினை எடுத்து கொள்ளவேண்டும்.
கண்களில் அதிக வெளிச்சம்
அதிகமாக வேலை செய்யும் போது ஏற்படும் மன அழுத்ததினால் மூளை குழப்பமடைந்து தவறான தகவலை அனுப்பிவிடுவதால் பார்வைக்கு சட்டென்று அதிக வெளிச்சமும் புள்ளிகளும் தெரிகின்றன.
எப்போதும் நிமிர்ந்து நிற்பதன் மூலமும், அடிக்கடி காபி குடிப்பதை தவிர்ப்பதன் மூலமும் இதனை தடுக்கலாம்.
தோலில் தடிப்புகள் ஏற்படுதல்
தோலில் தடிப்புகள் ஏற்பட்டால் அது இதயநோயின் அறிகுறியாக கூட இருக்கலாம். குறிப்பாக காதின் பின்புறம் ஏற்பட்டால் கட்டாயம் இதய கோளாறு உள்ளது என்பதை அறியலாம்.
அதிகப்படியான மன அழுத்தம் மாரடைப்பு ஏற்படுவதற்கு வழிவகுக்கும். எப்போது பிரச்சனை எளிதாக கையாள்வதே நன்மை தரும்.
முகம் வீக்கமாக இருத்தல்
உடலில் தேவையான அளவிற்கு தண்ணீர் இல்லாவிட்டால் இரத்த செல்களானது விரிவடைந்து முகம் வீங்கி காணப்படும்.
ஒரு நாளுக்கு குறைந்தபட்சமாக 8 டம்ளர் நீரையாவது அருந்தவேண்டும்.
தோல் இளம் மஞ்சளாக மாறுவது
தோல் இளம் மஞ்சளாக மாறுவது கல்லீரல் நோயின் அறிகுறியாக கூட இருக்கலாம். கல்லீரல் பாதிப்படைந்தால் உடலில் மஞ்சள் நிறத்தில் உள்ள பித்தநீர் போன்றவற்றினை வெளியேற்ற இயலாது. இதனால் தோல் மஞ்சளாக மாறுகிறது.
அதிகப்படியான ஆல்கஹால் அளவினால் கூட கல்லீரல் பாதிக்கும் அபாயமுள்ளது. எனவே, குடிப்பழக்கத்தினை கைவிடுவது நலம் தரும்.