குடும்ப வறுமையிலும் சாதனை படைத்த வவுனியா மனைவி ஒருவர் தனது எதிர்கால இலட்சியமாக வைத்தியராக வருவதற்கு ஆசைப்படுவதாக தெரிவித்துள்ளார்.
மேலும் தனது குடும்ப வறுமை காரணமாக மேற்படிப்பை தொடர முடியுமா? என்ற கேள்வி தன்னுள் எழுவதாகவும், இருந்தாலும் குறிக்கோளை அடைவேன் என தெரிவித்துள்ளார்.
கடந்த இரு தினங்களுக்கு முன்னர் வெளியான க.பொ.தசாதாரண பரீட்சையில் வவுனியா மூன்று முறிப்பு அ.த.க பாடசாலையில் கல்வி பயிலும் ராம்ராஜ் யாழினி என்ற மனைவி 8A,C என்ற பெறுபேற்றை பெற்றுள்ளார்.
குறித்த மாணவியின் தந்தை நுவரெலியாவில் உள்ள தோட்டம் ஒன்றில் தோட்ட தொழிலாளியாக கூலி வேலை செய்துவருகிறதுடன், தாயார் வீட்டு பணிகளை மேற்கொண்டு வருகின்றார்.
குடும்ப வறுமை நிலை காரணமாக வவுனியாவில் உள்ள உறவினரின் வீட்டில் இருந்தே குறித்த மாணவி கல்வி பயின்று வருகிறார்
எதிர்கால இலட்சியமாக தான் சிறந்த வைத்தியராகி வறுமையில் வாழும் மக்களுக்கு சிறந்த சுகாதார சேவையை வழங்க வேண்டும் என்பதிதே குறிக்கோள் என தெரிவித்துள்ளார்.