நீண்ட எதிர்பார்ப்புக்கிடையே சரக்கு மற்றும் சேவை வரி(ஜி.எஸ்.டி) மசோதா மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டு, விவாதத்திற்கு பின்னர் நிறைவேற்றப்பட்டது. இதனையடுத்து மாநிலங்களவையில் ஜி.எஸ்.டி. மசோதா தாக்கல் செய்யப்பட உள்ளது. மாநிலங்களவையில் ஆளும் பா.ஜ.க.வுக்கு போதிய அளவு பெரும்பான்மை இல்லை.
இந்நிலையில், பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளின் பொய்கள் மற்றும் அரசுக்கு எதிரான தவறான பிரச்சாரங்களுக்கு பதிலடி கொடுங்கள் என்று பா.ஜ.க. எம்.பி.களுக்கு பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
முன்னதாக பிரதமர் மோடி மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா, சட்டீஸ்கர் உள்ளிட்ட பா.ஜ.க. ஆளும் மாநிலங்களை சேர்ந்த எம்.பி.க்களை சந்தித்து பேசினார்.
அப்போது, ஓ.பி.எஸ் கமிஷன் விவகாரம், ஜி.எஸ்.டி மசோதா உள்ளிட்டவற்றில் ஆரோக்கியமான விவாதத்தை மேற்கொண்டு அரசின் நிலைப்பாட்டினை தெளிவுபடுத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.