சக ஊழியர்களால் ஏற்பட்ட சச்சரவுகள் அகலும் நாள். வளர்ச்சி கூடும். வீடு, வாகனப் பராமரிப்பு செய்வது பற்றிச் சிந்திப்பீர்கள். தொழில் ரீதியாக புதிய கூட்டாளி கள் வந்திணையும் வாய்ப்பு உண்டு.
உடன்பிறப்புகள் உதவிக்கரம் நீட்டும் நாள். குடும்பத்தில் மூத்த வர்களின் கருத்துக்களை கேட்டு நடப்பதன் மூலம் முன்னேற்றம் கூடும். நீண்ட நாளைய பஞ்சாயத் துக்கள் நல்ல முடிவிற்கு வரும்.
இடமாற்றங்களால் இனிமை காண வேண்டிய நாள். இல்லம் தேடி நல்ல தகவல் வரும். கை யிருப்பு கரையலாம். குடும்பத்தில் உள்ளவர்களிடம் விட்டுக் கொடுத்துச் செல்வது நல்லது.
பணம் பல வழிகளில் வந்து பையை நிரப்பும் நாள். விலை யுயர்ந்த பொருட்களை வாங்கிச் சேர்க்கும் எண்ணம் உருவாகும். உத்தியோக முன்னேற்றம் கருதி எடுத்த முயற்சி வெற்றி தரும்.
காசு பணப்புழக்கம் அதிகரிக்கும் நாள். கட்டிடப் பணியில் ஆர்வம் காட்டுவீர்கள். எடுத்த காரியங்களை எளிதில் செய்து முடிக்க மாற்றினத்தவர்கள் தூரத்து உறவினர்கள் கைகொடுத்துதவுவர்.
அனுசரித்துச் செல்வதன் மூலம் ஆதாயத்தைக் காண வேண்டிய நாள். பயணங்களைத் தள்ளி வைப்பது நல்லது. கல்வி நலன் கருதி எடுத்த முயற்சியில் கொஞ்சம் தாமதம் ஏற்படும்.
யோசித்துச் செயல்பட வேண்டிய நாள். மதியத்திற்கு மேல் மனக்கசப்பு தரும் தகவல் வந்து சேரும். அடுத்தவர்களுக்காக வாங்கிக் கொடுத்த தொகை வந்து சேர்வதில் பிரச்சினை ஏற்படலாம்.
காலை நேரத்திலேயே காதினிக்கும் செய்தி வந்து சேரும் நாள். காசு பணப்புழக்கம் அதிகரிக்கும். புதியவர் களின் அறிமுகம் கிடைக்கும். இடம், பூமி விற்பனையால் எதிர்பார்த்த தொகை கைக்கு கிடைக்கலாம்.
செலவுகள் அதிகரிக்கும் நாள். சிறு சிறு பிரச்சினைகள் வந்து சேரும். வாக்குவாதங்களைத் தவிர்ப் பது நல்லது. ஆரோக்கியத்தில் அச் சுறுத்தல்கள் ஏற்பட்டு அகலும். வேலைப்பளு அதிகரிக்கும்.
சந்தோஷம் அதிகரிக்கும் நாள். சான்றோர்களின் சந்திப்பு கிட்டும். உற்றார், உறவினர் வழியில் உதவி கிட்டும். வரன்கள் வாயில் தேடி வந்து சேரலாம். தொழில்ரீதியாக திடீர் பயணங்களை மேற்கொள்வீர்கள்.
எதிரிகள் உதிரியாகும் நாள். எடுத்த காரியங்களை எளிதில் செய்து முடித்து வெற்றி காண்பீர் கள். பழைய கடன்களை பைசல் செய்ய புதிய கடன்களை வாங்கும் சூழ்நிலை ஏற்படும்.
மகிழ்ச்சி அதிகரிக்கும் நாள். மாற்றுக் கருத்துடையோர் மனம் மாறுவர்.இடம், பூமி சம்மந்தப்பட்ட வகையில் ஏற்பட்ட பிரச்சினை கள் நல்ல முடிவிற்கு வரும். வரவு திருப்தி தரும்.