தயாரிப்பாளர் சங்க தேர்தல் நெருங்கிவிட்டது. போட்டியிடுவோர் முனைப்புடன் செயல்பட்டு வரும் நிலையில் யார் வெற்றி பெறுவார்கள் என்ற எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.
தற்போதைய தலைவராக இருக்கும் கலைப்புலி தாணு சமீபத்தில் நடந்த தயாரிப்பாளர்கள் சங்க கூட்டத்தில் மேடையில் போன் ஆதாரத்துடன் விஷால் பற்றிய ஒரு விசயத்தை வெளியிட்டார்.
தெலுங்கு படத்தயாரிப்பாளரான ரமேஷ் நாயுடு தமிழில் சமர் படத்தை விஷாலை வைத்து எடுத்திருந்தார். படத்தின் தெலுங்கு ரிமேக்கை தனக்கு தருமாறு கேட்டார் விஷால். ரமேஷ் நாயுடு நான் அதை ஏற்கனவே விற்றுவிடேன் என்று சொல்ல விஷால் கோபமடைந்தார்.
திரு இயக்கிய இப்படத்தின் கிளைமாக்ஸ் காட்சிகள் பாண்டிச்சேரியில் படமாக்கப்பட்டது. அப்போது குடும்பத்துடன் கிளைமாக்ஸ் பார்க்க வந்தாராம் ரமேஷ். இதனால் விஷால், நான் அவர் வந்தால் நடிக்க மாட்டேன் என கூறி அங்கிருந்து கிளம்பிவிட்டார்.
இவரை வைத்து படம் எடுத்த தயாரிப்பாளர்கள் மிகவும் நஷ்டத்தில் உள்ளனர் என கூறியதோடு மேடையிலேயே போன் ஆதாரத்தையும் வெளியிட்டார்.