இலங்கை – இந்தியாவுக்கு இடையில் அமைந்துள்ள ஆதாம் பாலம் இயற்கையாகவே தோன்றிய ஒன்று அல்ல என அறிவிக்கப்பட்டுள்ளது.
நாசா நிறுவனத்துடன் இணைந்து இந்திய வல்லுனர்கள் சிலர் மேற்கொண்ட ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய இராமர், இராவணன் யுத்தத்தின் போது வானர படை இலங்கைக்கு வருவதற்காக பயன்படுத்தியதாக கூறப்படும் ராமர் பாலம் என அடையாளப்படுத்தும் குறித்த இடம், சாதாரணமான ஒன்று அல்ல என நாசா மற்றும் இந்திய வல்லுனர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
அந்த பாலம் இயற்கையாக தோன்றியதென கூறப்பட்டதற்கு அது மனிதர்களின் நிர்மாணிப்பு என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
உறுதியாக அந்த பாலம் 1.7 மில்லியன் ஆண்டு பழைமையானதென குறித்த ஆய்வாளர்களினால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
பல ஆயிரம் வருடங்களுக்கு முன்னர் இலங்கை இந்தியாவுக்கு இடையில் 18 கிலோமீற்றர்களை மூடி காணப்பட்ட ஆதாம் பாலத்தின் ஊடாக இரண்டு நாடுகளும் தொடர்புப்பட்டிருந்ததாக கூறப்படுகின்றது.
இராவணனிடமிருந்து சீதையைக் காப்பாற்ற உதவிய வானரங்கள் அல்லது குரங்குளின் மூலம் இராமர் இந்த பாலத்தை கட்டினார் எனவும், இராமாயணத்தில் இந்த பாலம் சேது பந்தனம் என்ற பெயரில் அழைக்கப்படுவதாகவும் குறிப்பிடப்படுகின்றது.
சுண்ணாம்பு பாறைகளை வரிசையாக நீட்டிவிட்டு தமிழ் நாட்டின் தென்கிழக்கு கடற்கரையில் உள்ள பாம்பன் தீவு மற்றும் இலங்கையின் வடமேற்குப் பகுதியில் உள்ள மன்னார் தீவுகளுக்கிடையில் உருவாக்கப்பட்ட இடம் தான் ஆதாம் பாலம்.
இந்தியா மற்றும் இலங்கையை இணைக்கும் வகையில், இப்படியொரு பாலம் இருந்ததையும், அது மனிதர்கள் நடந்து செல்ல வசதியாக இருந்ததையும் புவியியலாளர்கள் உறுதி செய்கின்றனர். தற்போது இந்த இரு நாடுகளையும் பிரிக்கும் கடல் பகுதி சேதுசமுத்திரம் அல்லது சீ ஆப் தி பிரிட்ஜ் என்று அழைக்கப்படுகிறது.
அதற்கமைய இங்கு மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் இது உறுதியாக மனிதர்களினால் நிர்மாணிக்கப்பட்ட பாலம் எனவும், இது இயற்கையாக தோன்றியது அல்ல என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.