இந்தயாவில் கடந்த ஆண்டு அதிக நன்கொடை வழங்கிய தனிநபர் குறித்த ஆராய்ச்சி மேற்கொண்ட ஹுருன் நிறுவனம் அப்படியலை வெளியிட்டுள்ளது.
அதன்படி கடந்த ஆண்டு அதிக நன்கொடை அளித்த தொழிலதிபர்களில் ஹெச்.சி.எல் நிறுவன அதிபர், ஷிவ் நாடார் முதலிடத்தில் உள்ளார்.
ஹெச்.சி.எல் நிறுவன அதிபர், ஷிவ் நாடார் 2016ம் ஆண்டு இந்தியாவின் கொடை வள்ளல் என பெயர் சூட்டப்பட்டுள்ளது.
தனது ஷிவ் நாடார் அறக்கட்டளை சார்பாக மருத்துவம் உட்பட பல்வேறு திட்டங்களுக்கு 630 கோடி நன்கொடையாக வழங்கியுள்ள அவர், தமிழர் என்பது குறிப்பிடத்தக்கது.
இன்போசிஸ் நிறுவனத்தின் தலைமை அதிகாரி கிரிஷ் கோபாலகிருஷ்ணன் மற்றும் அவரது குடும்பத்தினர் 313 கோடி ரூபாயும் ரிலையன்ஸ் நிறுவன சேர்மன் முகேஷ் அம்பானி 303 கோடி ரூபாயும், ஆதித்யா பிர்லா குரூப் சேர்மன் குமார் மங்கலம் பிர்லா, 21 கோடி ரூபாயும் கடந்த ஆண்டு நன்கொடை வழங்கியுள்ளனர்.