Loading...
கனடாவின் டொரண்டோ நகரில் 404 பேர் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் போல மாறுவேடம் அணிந்து வந்து உலக சாதனை படைத்தனர்.
இதற்கு முன்னர் 99 பேர் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் போல மாறுவேடத்தில் தோன்றியதே கின்னஸ் உலக சாதனையாக இருந்தது. இந்த நிகழ்வில் கலந்து கொண்ட 404 பேரும் – ஐன்ஸ்டீன் போலவே பிளேசர், டை வெள்ளை விக் மற்றும் மீசை அணிந்திருந்தனர்.
Loading...
இந்த நிகழ்வின் முடிவில் ‘உங்களில் அடுத்த ஐன்ஸ்டீன் யார்?’ என்ற போட்டியும் தொடங்கியது. இதில் பங்கேற்போர் உலகத்தை மாற்றும் வித்தியாசமான யோசனைகளை முன் வைக்க வேண்டும். வெற்றி பெறுபவருக்கு ரூ 6.5 லட்சம் அவரின் யோசனையை நிஜமாக்க வழங்கப்படும். இந்த போட்டி ஏப்ரல் 25-ம் தேதி முடிவுக்கு வரும்.
Loading...