Loading...
நடிகர் சங்கத்தின் புதிய கட்டடம் நடிகர்களுக்குப் பெரிய கோட்டையாக அமையும் என்று நடிகர் கமல்ஹாசன் நம்பிக்கைத் தெரிவித்தார்.
சென்னை தி.நகரில் உள்ள நடிகர் சங்க வளாகத்தில், புதிய கட்டடத்துக்கான அடிக்கல் நாட்டு விழா, இன்று நடைபெற்றது. தென்னிந்திய நடிகர் சங்க தலைவர் நாசர், பொதுச்செயலாளர் விஷால் மற்றும் நடிகர், நடிகைகள் பங்கேற்றனர். விஷால் முதல் செங்கல்லை எடுத்து வைத்து, அடிக்கல் நாட்டு விழாவைத் தொடங்கி வைத்தார்.
Loading...
சுமார் 11.30 மணியளவில் நடிகர் கமல்ஹாசன் விழாவில் கலந்து கொண்டார். அப்போது கமல்ஹாசனும் ஒரு கல்லை எடுத்து வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நடிகர் சங்கத்தின் புதிய கட்டடம் நடிகர்களுக்குப் பெரிய கோட்டையாக அமையும் என நம்புவதாகக் கூறினார்.
Loading...