நடிகர் சங்கக் கட்டடத்தில் நடக்கும் முதல் திருமணம் விஷாலுடையதாகத்தான் இருக்கும் என நடிகர் விஜயகுமார் கூறினார்.
நடிகர் சங்க கட்டடத்துக்கான அடிக்கல் நாட்டு விழா, சங்க வளாகத்தில் இன்று காலை நடந்தது. இதில் பங்கேற்பதற்காக பல மூத்த நடிகர், நடிகைகள் வந்திருந்தனர். விழாவில் பத்திரிகையாளரிடம் பேசிய நடிகர் விஜய்குமார், ’நடிகர் சங்க கட்டடம் கட்டிய பின்னர் தான் திருமணம் செய்வேன் என நடிகர் விஷால் கூறியுள்ளர். இப்போது பூமி பூஜை போடப்பட்டுள்ளது. அடுத்தாண்டு கட்டடம் முழுமையாகக் கட்டப்பட்டு விடும். அநேகமாக நடிகர் சங்க கட்டடத்தில் நடக்கும் முதல் திருமணம், விஷாலுடையதாகத்தான் இருக்கும் என நினைக்கிறேன்’ என்றார்.
விழாவில், நடிகர் சங்கத் தலைவர் நாசர், துணைத்தலைவர் பொன்வண்ணன், மனோபாலா, பூச்சி முருகன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.