Loading...
நாடு முழுவதும் H1N1 வைரஸ் காய்ச்சலுக்கு இணையாக புதிய வகை வைரஸ் காய்ச்சல் ஒன்று பரவி வருவதாக சுகாதார அமைச்சின் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் ஜயசுந்தர பண்டார தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், புதிய வைரஸ் காய்ச்சல் தொடர்பில் சிறுவர்கள், கர்ப்பிணி பெண்கள் உள்ளிட்டவர்கள் மிகவும் அவதானமாக இருக்க வேண்டும் எனவும் சுகாதார அமைச்சு எச்சரிக்கை விடுத்துள்ளது.
Loading...
மேலும், தடிமன், காய்ச்சல் மற்றும் இருமல் காணப்படுபவர்கள் உடனடியாக வைத்தியரை அனுகி ஆலோசனைகளையும், சிகிச்சைகளையும் பெற்றுக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இதேவேளை, எச்.1.என் 1 (H1N1 Swine Flu Virus) என்ற பன்றி காய்ச்சல் நோயினால் மாத்தளை மாவட்டத்தில் மாத்திரம் ஐந்து பேர் உயிரிழந்துள்ளதாக செய்திகள் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Loading...