இங்கிலாந்தில் இருந்து இந்தி பட உலகில் காலடி வைத்து முன்னணி நடிகை ஆனவர் கத்ரீனா கைப். ஆரம்பத்தில் இவர் இந்தி நடிகர் சல்மான்கானின் காதலி ஆனார்.
‘மார்க்கெட்,’ சூடு பிடித்ததால் சல்மான்கானிடம் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக விலகினார். பின்னர் ரன்பீர் கபூரை காதலிப்பதாக கூறப்பட்டது. இப்போது கத்ரீனாகைப், ரன்பீர் கபூரையும் பிரிந்து விட்டதாக சொல்லப்படுகிறது.
இந்த நிலையில், சல்மான்கானும் கத்ரீனாகைப்பும் நடித்து வெற்றிபெற்ற ‘ஏக் தா டைகர்’ படத்தின் இரண்டாம்பாகம் ‘டைகர் ஜிந்தா ஹை’ என்ற பெயரில் எடுக்கப்படுகிறது. இதிலும் சல்மான்கானும் கத்ரீனா கைப்பும் ஜோடியாக நடிக்கிறார்கள். இந்த நிலையில், படப்பிடிப்பின்போது சல்மான்கானிடம் கத்ரீனா கைப் மிகவும் பாசமாக பழகி வருகிறார். சல்மான் கானும் அதிக பாசம் காட்டுகிறார். படப்பிடிப்பு இல்லாத நேரங்களிலும் பேசிக் கொண்டே இருக்கிறார்கள். இருவரும் பழகும் விதத்தை பாக்கும் போது கத்ரீனா கைப் மீண்டும் சல்மான்கானிடம் காதலில் விழுந்து விட்டார் என்பது உறுதியாகி விட்டது.
சமீபத்தில் நடந்த ஒரு விபத்தில் கத்ரீனாவுக்கு அடிபட்டு முதுகு வலியால் அவதிபட்டார். இதை பார்த்த சல்மான் கான் மிகவும் வேதனைப்பட்டு சோகத்தில் மூழ்கிவிட்டார். எனவே, அவரும் தனது காதலை புதுப்பித்துவிட்டார் என்று இந்தி பட உலகில் பேசிக் கொள்கிறார்கள்.