குடும்பத்தில் மகிழ்ச்சி கூடும் நாள். கொடுக்கல் வாங்கல்கள் ஒழுங்காகும். பணத்தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும். எந்தக் காரியத்தையும் துரிதமாகச் செய்துமுடிக்க இயலும். ஆரோக்கியம் சீராகும்.
இடமாற்றச் சிந்தனைகள் மேலோங்கும் நாள். குடும்பச்சுமை கூடுதலாகவே இருக்கும். வியாபார விருத்திக்கு புது யுக்திகளைக் கயை£ள்வீர்கள். கொடுத்த வாக்கைக் காப்பாற்ற இயலாது.
தொழில் போட்டிகள் அதிகரிக்கும் நாள். துணிந்து எடுத்த முடிவு வெற்றி கிட்டும்.பொதுவாழ்வில் புதிய பொறுப்புகள் வந்து சேரும். வியாபாரத்தில் இழந்த லாபத்தைப் பெறுவீர்கள். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும்.
குறைகள் அகலும் நாள். கூடுதல் லாபம் தொழிலில் கிடைக்கும். பணப்புழக்கம் அதிகரிக்கும். பயணங்கள் மூலம் நல்ல செய்தி வந்து சேரும். பஞ்சாயத்துக்கள் நல்ல முடிவிற்கு வரும்.
பணமழையிலும், பாசமழையிலும் நனையும் நாள். விலகிச் சென்றவர்கள் விரும்பி வந்து சேருவர். வாகனப் பராமரிப்பு செலவு கூடும். வீடு வாங்கும் முயற்சி அனுகூலம் தரும்.
பெற்றோர் வழியில் இருந்த பிரச்சினைகள் அகலும் நாள். நண்பர்கள் தொழில் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருப்பர். பூர்வீக சொத்துப்பிரச்சினை அகலும். பணிமாற்றம் பற்றிய தகவல் வந்து சேரும்.
வழிபாட்டால் வளர்ச்சியைக் கூட்டிக் கொள்ள வேண்டிய நாள். வாய்ப்புகள் கைநழுவிச் செல்லும். பணப்பொறுப்புகள் சொல்வதைத் தவிர்ப்பது நல்லது. கையிருப்புக் கொஞ்சம் கரையலாம்.
காரிய வெற்றி ஏற்படும் நாள். பாதியில் நின்ற பணி மீதியும் தொடரும். பணவரவு திருப்திகரமாக இருக்கும். உறவினர்கள் உதவிக்கரம் நீட்டுவர். தொழில் முயற்சிக்கு நண்பர்களின் ஒத்துழைப்பு உண்டு.
கூட்டாளிகளால் கூடுதல் லாபம் கிடைக்கும் நாள். எதிரிகள் விலகுவர். உங்கள் ஆலோசனைகள் மற்றவர்களுக்கு உறுதுணையாக இருக்கும். தொழில் தொடங்குவது பற்றிய சிந்தனை மேலோங்கும்.
பிள்ளைகளால் ஏற்பட்ட பிரச்சினை அகலும் நாள். பொதுக்காரியங்களில் நாட்டம் அதிகரிக்கும். பழைய வாகனங்களைக் கொடுத்துவிட்டு புதியவாகனங்கள் வாங்கலாமா என்று சிந்திப்பீர்கள்.
சொத்துக்களால் லாபம் கிட்டும் நாள். உடன்பிறப்புகள் உதவிக்கரம் நீட்டுவர். வருமானம் திருப்தி தரும். கோவில் வழிபாட்டில் ஆர்வம் காட்டுவீர்கள். கொடுக்கல்– வாங்கல்கள் சிறப்பாக அமையும்.
திட்டமிட்ட காரியங்களை வெற்றிகரமாக முடிக்கும் நாள். தொழில் முயற்சிக்கு மாற்று இனத்தவர் ஒத்துழைப்பு செய்வர். விலகிச் சென்ற உறவினர்கள் விரும்பி வந்து சேருவர். வரவு திருப்தி தரும்.