சிறிலங்கா விசேட அதிரடிப்படையினரும், காவல்துறையினரும் இணைந்து நாடு முழுவதும் மேற்கொண்ட திடீர் சுற்றிவளைப்பில் 1570 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக காவல்துறைத் திணைக்களம் அறிவித்துள்ளது.
காவல்துறைமா அதிபர் பூஜித ஜெயசுந்தரவின் பணிப்பிற்கமைய இச்சுற்றிவளைப்பு இடம்பெற்றதாகவும், இந்நடவடிக்கைக்காக நாடு முழுவதிலுமிருந்து 10756 காவல்துறையினர் ஈடுபடுத்தப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இச்சுற்றிவளைப்பின்மூலம் நீதிமன்ற பிடியாணை பிறப்பிக்கப்பட்ட 739பேரும், குற்றச் செயல்களுடன் தொடர்புடைய 112பேரும், ஹெரோயின் போதைப் பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டின்பேரில் 198பேரும், மதுபானம் வைத்திருந்தவர்கள் என்ற குற்றச்சாட்டின்பேரில் 200 பேரும் கைதுசெய்யப்பட்டுள்ளதாக காவல்துறைத் திணைக்களம் அறிவித்துள்ளது.
அத்துடன் குடிபோதையில் வாகனம் ஓட்டியவர்கள் என்ற சந்தேகத்தின்பேரில் 310பேரும், சாரதி அனுமதிப் பத்திரமின்றி பயணித்தவர்கள் 169பேரும், போக்குவரத்துச் சட்டத்தை மீறியவர்கள் 96பேரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.