சிறிலங்கா அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் சிறிலங்கா சுதந்திரக் கட்சிக்கும், ஐக்கிய தேசியக் கட்சிக்குமிடையில் இணக்கப்பாடுகள் ஏற்படுவதில் இழுபறிநிலை காணப்படுவதால், அமைச்சரவை மாற்றம் மீண்டும் காலவரையறையின்றி பிற்போடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
எதிர்வரும் சித்திரைப் புத்தாண்டுக்குப் பின்னர் அமைச்சரவையில் மாற்றங்கள் இடம்பெறலாம் என செய்திகள் வெளியாகின. இருப்பினும், ஏற்கனவே பல தடவைகள் அமைச்சரவையில் மாற்றங்கள் இடம்பெறலாம் என செய்திகள் வெளியாகியிருந்தபோதிலும் இறுதி முடிவுகள் எட்டப்படவில்லை.
இந்நிலையிலேயே அமைச்சரவை மாற்றமும் புத்தாண்டுக்குப் பின்னர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
வெளிவிவகாரம், ஊடகத்துறை, உயர்கல்வி, நிதி மற்றும் விவசாய அமைச்சுக்கள் தொடர்பாகவே இரண்டு கட்சிகளுக்குமிடையில் இணக்கப்பாடு எட்டப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.