ஆர்.கே நகர் தேர்தல் பிரச்சாரத்துக்கு சென்ற சசிகலா ஆதரவாளர் சி.ஆர் சரஸ்வதி மீது அழுகிய தக்காளி மற்றும் காய்கறிகள் வீசப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.
ஆர்.கே நகர் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் டிடிவி தினகரன் தொடர்ந்து மக்களை சந்தித்து ஓட்டு கேட்டு வருகிறார்.
அவருக்கு ஆதரவாக நேற்று அ.தி.மு.க செய்தித் தொடர்பாளரும், நடிகையுமான சி.ஆர்.சரஸ்வதி திறந்த ஜீப்பில் நின்று தொப்பி சின்னத்திற்கு ஓட்டுக் கேட்டுக் கொண்டிருந்தார்.
அப்போது அந்த வழியாக வந்த ஓ.பிஎஸ் ஆதரவாளர்கள் ஜெயலலிதா இட்லி சாப்பிட்டார்னு சொல்லிட்டு பிணமாக தானே கொண்டு வந்தீங்க என அவரை நோக்கி கூச்சலிட்டனர்.
அப்போது இதை பார்த்து அங்கு வந்த பெண்கள், கீழே கிடந்த அழுகிய தக்காளி, காய்கறிகளை எடுத்து சரஸ்வதி மீது வீசினார்கள். இதையடுத்து அவர் அங்கிருந்து வேகமாக கிளம்பி சென்று விட்டார்