தக்காளி மற்றும் தயிரை வைத்து ஒரு பேஸ் பேக் செய்வது எப்படி என்று கொடுக்கப்பட்டுள்ளது.
இதை செய்வதால் முகத்தில் உள்ள அழுக்குகளை நீக்கி, முகத்தை பொலிவுடன் வைக்க உதவும்.
இப்போது அதற்குத் தேவையான பொருட்கள், செய்முறை மற்றும் அவற்றின் பிற பலன்கள் பற்றியும் தெரிந்துக் கொள்வோம்..
தேவையான பொருட்கள்
தக்காளி – 1
தயிர் – 2 ஸ்பூன்
எலுமிச்சை சாறு – 1 ஸ்பூன்
உப்பு – 1 ஸ்பூன்
செய்முறை
முதலில் தக்காளியை சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ள வேண்டும். அத்துடன் தயிர், எலுமிச்சைச் சாறு, உப்பு ஆகியவற்றை சேர்க்க வேண்டும். எல்லாவற்றையும் நன்கு சேராக கலந்து, ஒரு பேஸ்ட் போல கலந்துக் கொள்ள வேண்டும்.
தக்காளி மற்றும் தயிர் கலந்த அந்த பேஸ்டை முகத்தின் எல்லா இடங்களிலும் பரவலாக தேய்த்துக் கொள்ள வேண்டும்.
ஒரு 5 நிமிடம் மசாஜ் செய்ய வேண்டும். 10 நிமிடம் முகத்திலேயே ஊற விடுங்கள். பின்னர் குளிர்ந்த நீரினால் முகத்தைக் கழுவி விடுங்கள்.
நன்மைகள்
தக்காளியில் வைட்டமின் சி அதிக அளவில் உள்ளது. இது உடலுக்கு ஆரோக்கியத்தை தருவதோடு நமது சருமத்திற்கும் பொழிவைத் தருகிறது.
தினமும் தக்காளியை முகத்திற்கு உபயோகிப்பதால் அது முகத்திற்கு நல்ல பிரகாசமான மற்றும் பொழிவான நிறத்தை நிச்சயம் கிடைக்கச் செய்கிறது.
தக்காளி உபயோகிப்பது சருமத்திற்கு ஆக்ஸிஜனை உறிஞ்சிக் கொள்ள அனுமதிக்ககிறது. இதனால், முகத்தில் வயதாவதால் ஏற்படும் சுருக்கங்கள் மற்றும் கோடுக்கள் வராமல் தடுக்கிறது.