Loading...
கொழும்பு காலி முகத்திடலில் நடத்துவதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ள ஒன்றிணைந்த எதிரணியின் மே தினக் கூட்டத்திற்கு போதுமான பாதுகாப்பை வழங்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்க அறிவுறுத்தல் விடுத்துள்ளார்.
அத்தோடு, கூட்டம் நடைபெறும் இடத்திற்கு மக்கள் இலகுவாக செல்வதை உறுதிப்படுத்துமாறும் கேட்டுக்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
Loading...
இதுகுறித்து காவல்துறை உயர் அதிகாரிகளுடன் கலந்தாலோசித்துள்ள சிறிலங்கா பிரதமர் ரணில் விக்ரமசிங்க, ஒன்றிணைந்த எதிரணியின் தலைவர்களுக்கு உயர் பாதுகாப்பை வழங்குமாறும் குறிப்பிட்டுள்ளார்.
Loading...