Loading...
பொதுவாக ஆயுர்வேத சிகிச்சையை மேற்கொள்வதால், நமது உடல் எடை குறைவதோடு, பொலிவான மற்றும் அழகான சருமத்தைப் பெறலாம்.
அந்த வகையில் ஒரே ஒரு ஆயுர்வேத டீயை அன்றாடம் தொடர்ந்து குடித்து வந்தால், அதனுடைய முழுமையான நன்மைகளை நாம் பெறலாம்.
எனவே நமது உடலின் ஆரோக்கியத்தை அதிகரித்து உடல் எடையை கட்டுகோப்புடன் வைத்துக் கொள்ள அற்புதமான ஆயுர்வேத டீ இதோ!
Loading...
தேவையான பொருட்கள்
- சீரகம் – 1 டீஸ்பூன்
- மல்லி – 1 டீஸ்பூன்
- சோம்பு – 1 டீஸ்பூன்
- மிளகு – 1/2 டீஸ்பூன்
- கிராம்பு – 7
- இஞ்சி – 2 துண்டு
- பட்டை – 2 இன்ச்
- தண்ணீர் – 1 லிட்டர்
செய்முறை
முதலில் ஒரு பாத்திரத்தில் நீரை ஊற்றி அடுப்பில் வைத்து, அதில் சீரகம், மல்லி, சோம்பு, கிராம்பு, இஞ்சி, பட்டை மற்றும் மிளகு ஆகிய அனைத்து பொருட்களையும் சேர்த்து, 10 நிமிடம் கொதிக்க வைத்து இறக்க வேண்டும்.
பின் அந்த டீயை 10 நிமிடம் கழித்து, வடிகட்டி குடிக்க வேண்டும்.
நன்மைகள்
- ஆயுர்வேத டீயை குடிப்பதால், அதில் உள்ள மசாலாப் பொருட்கள் இரத்தத்தில் உள்ள நச்சுக்களை வெளியேற்றி, இரத்தத்தை சுத்தமாக்குவதுடன் சருமத்தின் ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகிறது.
- ஆயுர்வேத மூலிகை டீயில் உள்ள மூலிகை பொருட்கள் செரிமான பாதை சுத்தமாகி, செரிமான மண்டலத்தின் இயக்கத்தை சீராக்கி, செரிமான பிரச்சனைகள் ஏற்படுவதை தடுக்கிறது.
- ஆயிர்வேத மசாலாப் பொருட்களை சேர்த்து டீ செய்து குடித்து வந்தால், உடல் உறுப்புக்களின் செயல்பாடுகள் அதிகரிப்பதோடு, அதன் ஆரோக்கியமும் மேம்படும்.
- சோம்பு, பட்டை, கிராம்பு போன்றவற்றில் உள்ள காரத்தன்மை, உடலில் தேங்கியுள்ள கெட்ட கொழுப்புக்களை கரைத்து, உடல் எடை குறைக்கிறது.
Loading...