தற்போதைய ஜனாதிபதியும், ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளருமான மைத்திரிபால சிறிசேனவின் ஆலோசனைக்கு அமையவே நீலப்படையணிக்கு பயிற்சிகள் வழங்கப்பட்டதாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
நீலப்படையணியைச் சேர்ந்த இளைஞர் யுவதிகளுக்கு பயிற்சி வழங்குவதற்காக தேசிய இளைஞர் சேவை சபைக்கு பல மில்லியன் ரூபா பணம் வழங்கப்பட்டமை குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகின்றது.
பாரிய நிதி மோசடிகள் மற்றும் அதிகார துஸ்பிரயோகம் தொடர்பிலான ஜனாதபிதி ஆணைக்குழுவினால் இந்த விசாரணை நடத்தப்பட்டு வருகின்றது.
விசாரணைக்குழுவின் எதிரில் நேற்று முன்னிலையான நாமல் ராஜபக்ச, கட்சியின் அப்போதைய பொதுச் செயலாளரது ஆலோசனைக்கு அமைய பயிற்சி வழங்கபபட்டதாகத் தெரிவித்துள்ளார்.
2014ம் ஆண்டில் நீலப்படையணியைச் சேர்ந்த இளைஞர் யுவதிகளுக்கு தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் பல்வேறு பயிற்சிகளை வழங்கியுள்ளது. இதற்காக பல மில்லியன் ரூபா பணம் செலுத்தப்பட்டுள்ளது.
நீலப்படையணி இதற்கான கொடுப்பனவை எவ்வாறு செய்தது என்பது குறித்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
நீலப்படையணியின் தலைவராக நாமல் ராஜபக்ஸ கடமையாற்றிய காரணத்தினால் இது குறித்து அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகின்றது.