Loading...
தூக்கத்தில் கனவுகள் வருவது பொதுவான ஒன்று தான். ஆனால் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு மாதிரியான கனவுகள் வரும். அப்படி வரும் கனவுகள் ஒவ்வொன்றும் நமது நிஜ வாழ்க்கையில் என்ன நடக்கப் போகிறது என்பதை சுட்டிக் காட்டும் என பலர் கூறுவர்.
சில நேரங்களில் சில கனவுகள் நம் எதிர்காலத்தில் நடக்க போகும் நல்லதையும் மற்றும் சில கனவுகள் கெட்டதையும் உணர்த்துமாம். அந்த வகையில் இக்கட்டுரையில் ஒரு ஆணின் கனவில் பெண்கள் எப்படியெல்லாம் வந்தால் என்ன அர்த்தம் என கொடுக்கப்பட்டுள்ளது.
Loading...
அதிலும் அதிகாலையில் பிரம்ம முகூர்த்தத்தில் கனவுகளைக் கண்டு, அந்த கனவு நமக்கு நினைவில் இருந்தால், அது நிச்சயம் நடக்கும் எனவும் வேதங்கள் கூறுகின்றன.
- ஒரு ஆண், தன் கனவில் மனைவி அல்லது நிச்சயித்தப் பெண்ணுடன் வெளியூர் பயணம் மேற்கொள்வது போன்று வந்தால், அது அந்த ஆணின் திருமண வாழ்க்கை வெற்றிகரமான அமையப் போகிறது என்று அர்த்தமாம்.
- ஒரு ஆண் வெள்ளை உடை அணிந்த ஒரு பெண்ணை கட்டிப்பிடிப்பது போன்று கனவு கண்டால், அந்த ஆணின் வாழ்வில் அதிர்ஷ்டம் கொழிக்கப் போகிறது என்று அர்த்தமாம்.
- ஒரு பெண் செஸ் அல்லது சதுரங்க விளையாட்டு அல்லது வேறு ஏதேனும் விளையாட்டு விளையாடுவது போன்று ஒரு ஆணின் கனவில் வந்தால், அந்த ஆண் விரைவில் பெயரும், புகழும் மேம்படப் போகிறது என்று அர்த்தம்.
- ஒரு ஆணின் கனவில் ஒரு பெண் நடனமாவது போன்று வந்தால், அந்த ஆணின் திருமண அல்லது காதல் வாழ்வில் முறிவு ஏற்படப் போகிறது என்று அர்த்தமாம்.
- ஒரு ஆண் தன் கனவில் திருமண கோலத்தில் ஒரு பெண் அழுவது போன்று கண்டால், அது மாமனார், மாமியாருடன் சண்டை வரப் போவதைக் குறிக்குமாம்.
- கனவில் தன் வாழ்க்கைத் துணைக்கு வைர ஆபரணங்களைப் பரிசாக கொடுப்பது போன்று ஒரு ஆண் கனவு கண்டால், அது அந்த ஆண் திருமண வாழ்வில் கூடிய விரைவில் பிரச்சனையை சந்திக்கப் போகிறார் என்று அர்த்தமாம்.
- ஒரு ஆணின் கனவில் ஒரு வெள்ளையான பெண் அவனால் கவரப்பட்டால், அந்த ஆணின் நிதி நிலைமை மேம்படும். அதுவே ஒரு அப்பெண் பை-பை சொல்லி சென்றால், எதிர்காலத்தில் உங்களது பூர்வீக சொத்து உங்களை வந்து சேரும் வாய்ப்புள்ளதைக் குறிக்குமாம்.
- கனவில் ஒரு ஆண் தேவதையைக் கண்டால், அந்த ஆண் எதிர்காலத்தில் பணக்காரர் ஆவதோடு, வேலைக்கு சென்று சம்பாதிக்க வேண்டிய அவசியமே இருக்காதாம்.
- ஒரு ஆண் தன் கனவில் மனைவி அல்லது காதலிக்கு குட்-பை சொல்லி செல்வது போன்று கண்டால், அந்த ஆண் விரைவில் உடல்நல குறைவால் அவஸ்தைப்படப் போகிறான் என்று அர்த்தமாம்.
- ஒரு ஆண் தன் கனவில் ஒரு பெண்ணின் நிர்வாண படத்தை வரைவது போன்று கண்டால், அந்த ஆணுக்கு கெட்ட நேரம் ஆரம்பமாகிவிட்டது என்று அர்த்தமாம்.
Loading...