Loading...
ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகிவரும் படம் `2.ஓ’. இப்படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது. சுமார் ரூ.400 கோடி பட்ஜெட்டில் உருவாகியுள்ள இப்படத்தை லைக்கா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரித்துள்ளது. பாலிவுட் நடிகர் அக்ஷய்குமார் இப்படத்தில் வில்லனாக நடித்துள்ளார். எமி ஜாக்சன் கதாநாயகியாக நடித்துள்ளார்.
இப்படம் குறித்து ஒவ்வொரு நாளும் பல ஸ்வாரஸ்ய தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன. இந்நிலையில், கடந்த வாரம், இப்படம் குறித்த புதுமையான தகவல் ஒன்று இணையதளங்களில் பகிரப்பட்டு வந்தது.
அதாவது, இப்படத்தில் ரஜினி 5 வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடிப்பதாக கூறப்பட்டது. அதேபோல் அக்ஷய்குமார் 12 விதவிதமான லுக்கில் வருவதாகவும் ஒரு செய்தி பகிரப்பட்டிருந்தது. ஏற்கனெவே, பறவை போன்ற ஒரு உருவத்தில் அவருடைய தோற்றத்தை போஸ்டராக வெளியிட்டிருந்தனர். அதோடு சேர்ந்து மொத்தம் 12 லுக்கில் இந்த படத்தில் அக்ஷய்குமார் வருவதாக கூறப்பட்டிருந்தது.
அதுமட்டுமில்லாமல், ஏமி ஜாக்சனுக்கும் இரண்டு கெட்டப்புகள் இருப்பதாகவும் கூற, படத்தின் மீதான ரசிகர்களின் எதிர்பார்ப்பு மேலும் கூடியது. இந்நிலையில் இயக்குநர் ஷங்கர் இந்த தகவல்களுக்கு மறுப்பு தெரிவித்துள்ளார். அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் “நோ” என்ற ஒரே வார்த்தையை பகிர்ந்து அனைத்து வித தகவல்களுக்கும் முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
எனினும் இப்படத்தின் உண்மைத்தன்மையை அறிய நாம் பொறுத்திருக்க தான் வேண்டும். இப்படம் தீபாவளி ரீலீசாக வருகிற செப்டம்பர் மாதம் வெளியாக உள்ளது.
Loading...