முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்த்தன மஹாவலி வலயத்தை ஆரம்பித்து நாட்டை அபிவிருத்தி செய்திருந்தார்.
அதேபோன்று ஹம்பாந்தோட்டை கைத்தொழில் வலயத்தை ஆரம்பித்து தொழில் வாய்ப்புக்கள் உருவாக்கப்படும் என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
திருகோணமலையில் நடைபெறும் யொவுன்புரய நிகழ்ச்சியில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க உரையாற்றினார்.
சீன பட்டுப்பாதையின் நன்மைகளை இலங்கைக்கு பெற்றுக்கொள்ளவும் நடவடிக்கை எடுக்கப்படும். கடன் சுமையில் தள்ளப்பட்டுள்ள நாட்டை அதிலிருந்து மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பிரதமர் சுட்டிக்காட்டினார்.
ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் பல கட்டங்களின் கீழ் விரைவாக அபிவிருத்தி நடவடிக்கைகள் மேற்கொண்டு இளைஞர் யுவதிகளுக்கு வேலை வாய்ப்புகளை வழங்கவுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
இலங்கையின் இளைஞர் யுவதிகளின் வேலையற்ற பிரச்சினைகளுக்கு வெகு விரைவில் தீர்வு வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்வதாக பிரதமர் இதன் போது சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த நிகழ்வில் பின்னர் அங்கு வருகை தந்த அனைத்து மாவட்ட இளைஞர் யுவதிகளுடன் பிரதமர் கலந்துரையாடல் ஒன்றும் மேற்கொண்டுள்ளார்.
பாடசாலை கல்வி 13ம் ஆண்டு வரை கட்டாயமாக்கப்படும். தொழில் பயிற்சிகளின் ஊடாக தொழில் வாய்ப்புக்கள் வழங்கப்படும் என்றும் அவர் கூறினார்.