நமீதா ரொம்பவே ஸ்லிம்மாகிவிட்டார். தமிழும் முன்பை விட நன்றாகப் பேசக் கற்றுக் கொண்டுவிட்டார். ஆனாலும் விழுந்து விழுந்து கூப்பிட்டாலும் எந்தக் கட்சியின் பிரச்சாரத்துக்கும் ஸ்ட்ரிக்டாக நோ சொல்லிவிட்டார்.
ஆனால் சினிமா விழாக்களில் தவறாமல் பங்கேற்று தன் சேவையைத் தொடர்கிறார்.இன்று அவர் கலந்து கொண்ட சினிமா விழா, யாகன் இசை வெளியீடு.
நிகழ்ச்சியில் பேசிய அவர், “வழக்கமான நிகழ்ச்சியிலிருந்து இது வித்தியாசமான , பட நிகழ்ச்சியாகத் தோன்றுகிறது. வழக்கமாக படத்தில் நடிக்கும் கதாநாயகிகளை வெளி மாநிலம் அல்லது வெளிநாட்டிலிருந்து நடிக்க இங்கே கொண்டு வருவார்கள். தமிழே தெரியாது. இதில் கதாநாயகன் சஜன் டென்மார்க் கிலிருந்து வந்துள்ளார்.கதாநாயகி லோக்கலாக இருக்கிறார்.
என்னதான் ருசியாக இருந்தாலும் பிரியாணியைத் தினமும் சாப்பிட முடியாது. எல்லாவற்றிலும் வித்தியாசம் வேண்டும். இப்படமும் வித்தியாசமான படமாக இருக்கும் என்று வாழ்த்துகிறேன்,” என்றார்.